Thursday, February 22, 2007

முதல் கிறுக்கல்..

என் கண்களை நேசிக்கிறேன் உன்னை என் கண்களுக்கு காட்டியதால்!
என் உதடுகளை நேசிக்கிறேன் உன் பெயரை உச்சரிப்பதால்!
என் இதயத்தை நேசிக்கிறேன் உனக்காகவே துடிப்பதால்!
என் பேனாவை நேசிக்கிறேன் உன் பெயரை எழுதுவதால்! (எனக்கு ஒரு doubt....பேனால இன்க் தீந்து போயிடுச்சுனா??!! ;)
என் inbox-ஐ நேசிக்கிறேன் உன் mail-ஐ சுமப்பதால்!
I LOVE U என்ற வார்த்தையை நேசிக்கிறேன் உன்னிடம் இருந்து வருவதால்!
என்னையே நான் நேசிக்கிறேன் நீ என்னுள் வாழ்வதால்!


*******************************************************************

என்று வருவாய் என் கைத்தளம் பற்ற??
நாட்கள் உருண்டோட உன்னுடன் வாழும் நிமிடங்கள் குறைகின்றதே என்கிற வருத்தம் எனக்கு!


யார் யாருக்கு எழுதினதுனு guess பண்ணுங்க பாக்கலாம் ;-)

Tuesday, February 13, 2007

பார்த்த முதல் நாளே...

எங்களோடது பக்கா Arranged Marriage தாங்க..
ஆனா...
இன்னும் Marriage ஆகல... :-)
இனிமேல் தாங்க கல்யாணம் :-( (கொஞ்சம் Over-a தெரியுதோ...)

28-Jan-2007 தான் ரெண்டு பேரும் நேர்ல மீட் பண்ணினோம்...
பார்த்ததும் உனக்கு நான் எனக்கு நீ-ன்னு தோணிச்சு ரெண்டு பேருக்கும்... (பல்பு ஏரியும்ணு சொல் வாங்கல இது தானா ? )

ரெண்டு வீட்டு side-ல இருந்தும் OK ஆனதுக்கு அப்புறம்...
1 வாரத்துல தொண்டை கட்ர அளவுக்கு கடலை..கடலை...கடலை...
ரெண்டு பேர் வீட்டுக்கும் தெரிஞ்சுதாங்க..உடனே வீட்டுக்கு மொட்டை கடிதாசி போடலாம்ன்னு Plan பண்ணிடாதீங்க :-)

ரெம்ப Close ஆகிட்ட feelings ரெண்டு பேருக்கும்...
2 வாரத்துல Friend-a,Lover-a,Best Life Partner-a எல்லா அவதாரமும் எடுத்தாச்சு...
கவிதை லாம் கூட எழுத ஆரம்பிச்சுடோம்னா பாத்துகோங்களேன்! (வேற வழி இல்ல நாங்களே புகழ்ந்துகிட்டோம்)
அம்புட்டு ரொமன்ஸு...

எல்லாம் போட்றோம்... (ரொம்ப பாவம்ங்க நீங்க) யாரு Author..எந்த Edition லாம் Cross கேள்வி கேக்காம படிச்சுட்டு நல்லா இருக்குனு Comment போஸ்ட் பண்ணனும்.. (இந்த கொடுமை வேறயா) ok ya :-)
நிறைய பேசினோம்...தொண்ட வலினால கொஞ்சம் "கஷ்ட"பட்டு கொறச்சுகிட்டோம்...வேற என்னடா செய்யலாம்ன்னு யோசிச்சப்ப Flash ஆனதுதான் இந்த "GallataCouple" Blog.
பேர select பண்றதுகுள்ள...அப்பப்பா...
இந்த blog-la நீங்களும் ஒங்க Jolly moments-a share பண்ணிக்கலாம்..

Monday, February 12, 2007

வாங்க...வாங்க...

காதல் செஞ்சுட்டு இருக்கிற ஜோடி, கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிற ஜோடி, கல்யாணம் பண்ணிக்க போற ஜோடி, already கல்யாணம் பண்ணின ஜோடி - எல்லாரும் ஒன்னா கூத்தடிக்கலாம் வாங்க...